ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இரவு இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து -ஹொரவ்பொத்தானை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் அதே பக்கமாக வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்விபத்தில் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும் இதேவேளை கிவுளக்கட பகுதியைச் சேர்ந்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளரின் சகோதரர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்து இடம்பெற்ற சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதியே விபத்து இடம்பெறுவதற்கு காரணம் என தெரியடுத்தியும் பொலிசார் பிரதான வீதியால் வந்தவர்களே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

ஆகவே விபத்துக்கள் இடம்பெறுகின்ற போது பொலிசார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும் எனவும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.