வவுனியாவில் மக்களைச் சந்திக்கிறார் கோட்டா!

    வடக்கு மாகாணத்தின் ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

    கிராமத்துடன் கலந்துரையாடல் 17ஆவது நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையில் போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    வெடிவைத்தகல்லு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றதைக் கருத்தில்கொண்டே, இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காணி உறுதி தொடர்பான பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வது, குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்தல், போகஸ்வெவ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல், உர களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணித்தல் போன்ற பிரச்சினைகளைக் கிராம மக்கள் முன்வைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

    ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல் நிகழ்வின் நோக்கம், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் கிராமத்துக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகளை கேட்டு, உடனடித் தீர்வு வழங்குவதாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.