உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கபோவதில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏசுபிரான் உயிர்தெழுந்த நாளை கிரிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு சிறப்பு நாளாக அனுஸ்ட்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஸ்ட்டிக்கப்படும் நிலையில், உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகிட்ட பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2019 ஆண்டு இதேபோன்ற உயிர்த்த ஞாயிறு தினத்திலேயே, நாட்டில் உள்ள கிரிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் சிலவற்றில் பயங்கரவாத குழுக்களினால் தற்கொலை தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதியுடன், குறித்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.