தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் பரிசோதிப்பு.

கல்முனை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பொது சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் உணவுகள் கையாளுகை தொடர்பான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

அந்தவகையில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வுகள் மற்றும் பரிசோதினை நடவடிக்கைகள் முன்னெடுத்து இருந்தனர்.

இவ் தேசிய உணவு பாதுகாப்பு வாரமானது கடந்த 01ம் திகதி முதல் 07ம் திகதி வரை நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதனடிப்படையில் இக் காலப் பகுதியில் திருக்கோவில் பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பரிசோதித்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.