விடுதலைப் புலி போராளிகளுக்கு இராணுவத்தின் செயற்கை கால்கள் வழங்கும் திட்டம்

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் போரின்போது கால்களை இழந்த முன்னாள் LTTE போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தை இலங்கை ராணுவம் இன்று (05) அறிமுகப்படுத்தியது.

இதற்கமைய இன்றையதினம் முன்னாள் LTTE போராளிகள் 32 பேருக்கும் நாளையத்தினம் மேலும் 32 பேருக்கும் குறித்த செயற்கை கால்கள் வழங்கப்பட்வுள்ளது.

குறித்த நபர்களில் முன்னாள் LTTE பெண் போராளி ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பலர் முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதியை இழந்துள்ள நிலையில் மேலும் சிலர் முழுமையாக தமது கால்களை யுத்தத்தில் இழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது என்று இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இனி எங்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள் என்று இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.