வானின் டயர் வெடித்ததில் வயலுக்குள் குடைசாய்ந்து.

மட்டக்களப்பு கொழும்பு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வானின் டயர் வெடித்ததில் வான் குடைசாய்ந்து, அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.

வான் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.