நகருக்கு வரும் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

மலையகத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டினை கொண்டாடுவதற்று ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்று (12) பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.இவர்களில் பலர் முறையாக முகக்கவசம் அணியாது சமூக இடைவெளிகளை பேணாது இருந்த நபர்களை பொலிஸார் எச்சரித்தனர்.

ஹட்டன் நகரில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஹட்டன் நகரில் அதிகமான பொலிஸார் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிரந்தன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவர்கள் பஸ்ஸில் மற்றும் நடைபாதைகளில் செல்லும் பொது மக்கள் முகக் கவசம் முறையாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வலியுறத்தியுடன் சிலர் எச்சரிக்கவும் பட்டனர்.

சித்திரை புத்தாண்டு முன்னிட்டு இன்று நீண்ட இடைவெளிக்கு பின் நடைபாதை வர்த்தகம் மற்றும் புடைவை கடை வர்த்தகம்,மறகரிகடை வர்த்தகம் ஆகியன உட்பட் வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தன.

சித்திரை புத்தாண்டு காரணமாக தலைநகரங்களிலிருந்தும்,ஏனைய பிரதான நகரங்களிலும் விசேட பஸ் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.பொது மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

அதே நேரம் அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அதிகமான கடைகளில் கட்டுப்பாட்டு விலைகளை மீறி வர்த்தகர்கள் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனை காணக்கூடியதாக இருந்தன.

இது குறித்த சில வர்த்தகரிடம் கேட்ட போது எந்த ஒரு மொத்த விற்பனையாளரும் தங்களுக்கு பொருட்களை குறைத்து கொடுக்கவில்லை என்றும் தாங்கள் தற்போது விற்பனை செய்யும் அதிகமான பொருட்கள் லாபமின்றியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்;டும் என்பதற்காக மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அத்தியவசிய பொருட்களின் விலை காரணமாக பொது ஏனைய காலங்களை விட குறைந்தளவு பொருட்களையே கொண்டு செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.

Leave A Reply

Your email address will not be published.