ஜான்சன் & ஜான்சன் கோவிட் தடுப்பூசி கொடுப்பதை அமெரிக்கா நிறுத்தியது

கோவிட் 19 வைரஸுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி அமெரிக்காவில் அரிதான இரத்த உறைவு சிக்கலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6.8 மில்லியன் பேரில் ஆறு நபர்களுக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐரோப்பாவும் இந்த தடுப்பூசியை கொடுப்பதை தாமதப்படுத்தும் என்று நிறுவனம் கூறியது.

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி முதன்முதலில் அமெரிக்காவில் பிப்ரவரி 27 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, ​​கோவிட் 19 வைரஸுக்கு எதிராக ஃபைசர் பயோன்டெக் தடுப்பூசி மற்றும் மொடர்னா தடுப்பூசி மட்டுமே தற்போது அமெரிக்காவில் கொடுக்கப்படுகின்றன.

இந்த தொற்றுநோயால் உலகளவில் , 137 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2.95 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை இறந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.