யாழில் எண்மர் உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 8 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை அறியப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.