ஆராய்ச்சி பணிகளுக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் மூவர் இன்று பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சி பணிகளுக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் மூவர் இன்று (17) 185 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் பெண் விண்வெளி வீரர் Kate Rubins உட்பட ரஷ்யாவின் Sergey Ryzhikov மற்றும் Sergey Kud-Sverchkov விண்வெளி வீரர்கள் மூவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) சென்றனர். தமது பணிகளை நிறைவு செய்த நிலையில். கடந்த வாரம் விண்வெளி நிலையம் சென்ற ரஷ்யாவின் Soyuz MS-17 விண்கலத்தில் இவர்கள் பூமிக்கு திரும்பினர்.

இவர்கள் வந்த விண்கலம் மூன்றுபகுதியாக பிரிந்து விண்வெளி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி பரசூட் மூலம் கஜகிஸ்தானின் பைகோனூர் காஸ்மோட்ரோம் புல்தரையில் தரையிறங்கினர்.

இவர்களுக்கு நாசாவின் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்து அமெரிக்காவுக்கு அழைத்துசென்றனர்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.