கண்டியில் புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழம் விநியோகம்.

முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கண்டி பள்ளிசால்கள் சங்கம் இணைந்து கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்ளுக்கு புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழம் விநியோகிக்கும் நிகழ்வு கண்டி கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலில் கண்டி பள்ளிவாசல்களின் சங்கத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட செயலகத்தின் முஸ்லிம் கலசார பண்பட்டலுவலக அதிகாரி சியாட் அஹமட், உடுநுவர பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உப தலைவரும் உடுநுவர பெரிய பள்ளியின் தலைவர் எம். ஜே. எம். ரிஸ்வி , உலமாக்கள் எனப் பலர் கலந்து கொணடனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட 286 பள்ளிவாசல்களுக்கு இந்தப் பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.