யாழ். சிறையில் 7 பேர், இராணுவத்தினர் மூவர் உட்பட வடக்கில் 11 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 11 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்போது 11 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் மூவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவத்தினராவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.