ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுக்கு கோட்டாபய வாய்ப்பூட்டு : கோட்டாபய

“கிழக்கு தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களைப் பெரிதுபடுத்தவேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்குச் செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில், திருக்கோணேஸ்வரம் ஆலயம் இல்லை அங்கிருந்தது கோகண்ண விகாரையே என்று குறிப்பிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் அந்தச் செயலணியை நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும்போது, “செயலணி உறுப்பினர்களை நான்தான் நியமித்தேன். அதன் தலைவராகப் பாதுகாப்புச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலணி உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை செயலணியின் கருத்தாக ஏற்கவேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அந்தக் கருத்துக்களை இன, மத, நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பெருப்பிக்க வேண்டாம். இதேவேளை, கருத்துக்களை வெளியிடுபவர்களும் அவதானமாக இருக்கவேண்டும்” – என்றார்.

Comments are closed.