தமிழ், முஸ்லிம்களை அடிமைப்படுத்தவா தனிச் சிங்களத்தில் கிழக்குச் செயலணி? – ரணில்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் பிரதிநிதிகள் எவரும் இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களே பெருமளவில் வாழ்கின்றார்கள். இந்தநிலையில், அவர்களை அடிமைப்படுத்தவா தனிச் சிங்கள – பௌத்தர்களைக்கொண்ட செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறுவியுள்ளார்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் பிரதிநிதிகள் உள்ளடக்காமல் கிழக்கில் ஜனாதிபதி செயலணி தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செயலணி ஏன் அவசரப்பட்டு நிறுவப்பட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.