முள்ளிவாய்க்காலில் காணி துப்பரவு செய்யும்போது வெடிபொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் காணியை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்யும்போது போரில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் காணி உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வெடிபொருட்கள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தினர். இனங்காணப்பட்ட வெடிபொருட்களை அங்கிருந்து அகற்ற அவர்கள் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கைக்குண்டு ஒன்றும், மிதிவெடி ஒன்றும் காணியில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.