ஊரடங்கால் வீதியில் உறங்கும் சிங்கங்கள்..

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் மூடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமையினாலும் சாலைகளில் வாகனங்கள் இல்லாமையினாலும் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் சாலைகளில் நடமாடுகின்றன.

அந்த வகையில்,நேற்று முன்தினம் 10 இற்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்த காட்சிகளை பூங்கா பாதுகாப்பு ஊழியர்கள் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஊரடங்கால் பூங்கா சாலைகள் எந்த வித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.