ரத்தக்கரை படிந்த கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் – துருக்கி அதிபர் காட்டம்

ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கிடையில், காசா முனை மீதான தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என தெரிவித்து வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் போருக்கு பின்னர் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அழைப்பு விடுத்து உள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கைகளில் ரத்தக்கரை படிந்துள்ளதாக துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக, அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய போது துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்தக்கரை படிந்த கைகளால் வரலாற்றை எழுதுகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் இனியும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை தொடர்பாக பைடனின் கையெழுத்தை நாங்கள் பார்த்தோம்’ என்றார்.

மேலும் இஸ்ரேல்-காசா விவகாரத்தில் துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.