பாலஸ்தீனியர்கள் போர்நிறுத்தத்தை கொண்டாடுகிறார்கள்

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான 11 நாள் மோதலில் 232 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

எருசலேமில் உள்ள அல்-அக்ஸா இஸ்லாமிய ஆலயத்தை மையமாகக் கொண்ட போரில் காசாவைச் சேர்ந்த ஹமாஸ் என்ற போராளிக்குழு வெற்றி பெற்றுள்ளது என ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியின் அடுக்குமாடி கட்டிடங்கள் உட்பட பல சொத்துக்களை சேதப்படுதுப்பட்டுள்ளன, மேலும் ஏராளமான பாலஸ்தீனியர்களை இடம்பெயர்ந்தனர்.

இதற்கிடையில், காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொள்ளும் கொரோனா தாக்கங்களுக்கு தீர்வு காண அடுத்த ஆறு மாதங்களில் 7 மில்லியன் டாலர் தேவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.