தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது.

ராகலை -உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் சென்லெணாட்ஸ் நடுக்கணக்குக்கு அருகில் 35 பேருக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ட்ரக்டரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்ற இவ் விபத்தில் 26 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ட்ரக்டர் வேக கட்டுப்பாட்டை மீறியமையால், பிரதான வீதியின் வலைவிலேயே இவ் விபத்துக்கு இடம்பெற்றுள்ளது என இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இவ் விபத்தில் பெண் தொழிலாளி, தனது கண்ணை இழந்துள்ளார். இருவருக்கு விரல்கள் உடைந்துள்ளன ஏனையோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன எற்பட்டுள்ளன என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.