வாகனங்களைத் திருடும் கும்பல் யாழில் இன்று வசமாக மாட்டியது 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்பு.

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் விட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிள்களைத் தந்திரமான முறையில் திருடும் 4 பேர் கொண்ட கும்பல் இன்று யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

குருநகர் மற்றும் அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து களவாடப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த மோட்டார் சைக்கிள்கள் பலாலி வீதி மற்றும் யாழ். வேம்படி வீதியில் குறித்த கும்பலால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.