ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கான தடை நீடிப்பு.

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கான தடை ஜூன்-14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுபோல் 14 நாட்களுக்குள் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் மற்ற இடங்கள் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க முடியாது.

இந்தியாவில் நிலவியுள்ள கோவிட் நெருக்கடியை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் மற்றும் விமானத் போக்குவரத்து துறை இணைந்து இந்த நுழைவுக்கு தடை விதித்தது.

Leave A Reply

Your email address will not be published.