தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (29) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17.05.2021ம் திகதி தொடக்கம் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 6ஆயிரத்தி 460 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இரண்டு கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 867 குடும்பங்களுக்குமான அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா நிவாரண பொதி வழங்கும் நிகழ்வே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த நிவாரண பொதிகள் கிராம சேவகர் பிரிவுகளில் கிராம சேவகர் மற்றும் மக்கள் கட்டமைப்பின் ஊடாக இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கிவைத்துள்ளார்கள்.

பொது சுகாதார விதிமுறைகளைப் பயன்படுத்தி மக்கள் அதிகமாக கூடாதவாறு கிரம சேவகரால் கட்டுப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.