முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு .

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு.


முல்லைத்தீவு மாவட்ட செயலர் க.விமலநாதன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ம.உமாசங்கர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக 29.05.2021 அன்று வவுனியா (ஓஹான்) வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு நிறுவன செயலாளர் சு.ஜெயச்சந்திரன் அவர்களால் ரூபா 175200/= பெறுமதியான சலவை இயந்திரம், நுளம்புவலை, தலையணை,தலையணை உறை,முகக்கவசங்கள்,படுக்கை விரிப்புகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சுவிட்சர்லாந்து விஜய் பவுன்டேசன் நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க.கிருபாசுதன், செயலக பணியாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணியாளர்கள் மற்றும் (ஓஹான்) வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு நிறுவன நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் இ.திவாகர், நிர்வாக உத்தியோகத்தர் ப.அமுதாவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.