விசேட தேவை உடையவர்களுக்கு தடுப்பூசிப் பட்டியலில் முன்னுரிமை! – சஜித் வலியுறுத்து.

கொரோனாத் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று காரணமாக அதிக பாதிக்கக் கூடியவர்களாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவை உள்ளவர்கள் தடுப்பூசிப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போலவே சம உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.