நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெருவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு.

நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் நடிகையும் தற்போது பாஜக கட்சியில் அரசியலில் ஈடுபட்டு வருபவருமான காயத்ரி ரகுராம் நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த வகையில் நடிகர் விஷால், “PSBB பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில்

அதற்கு எதிராக பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் அவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது…

நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன்படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள்.உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்கள் உங்களிடமிருந்து ஓடுகின்றார்கள் என்று பதிவு செய்து இருக்கிறார்.

முன்னணி நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெருவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் சமூக வலைதலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.