குடாநாட்டில் இன்றும் 60 வீதமான மக்களே தடுப்பூசிக்கு வருகை! – இரு நாள்களில் 9,020 பேருக்கு மருந்து.

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றலில் இன்றும் 60 வீதமான மக்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட தேர்வு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தல் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கக்பட்டது.

இன்று 10 ஆயிரத்து 52 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 6 ஆயிரத்து 72 பேர் மட்டும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டனர். இதற்கமையவே 60 வீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேநேரம் நேற்று 2 ஆயிரத்து 948 பேர் தடுப்பூசியைப் பெற்றதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இரு நாள்களிலும் 9 ஆயிரத்து 20 பேருக்கு மருந்து ஏற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.