தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், கொரோனா வைரஸ் தொற்றார்களுடன் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளின் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி ,அவர்களைத் தவிர்ந்து ஏனையோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ,இதேவேளை, நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நிலைமைகளால், நீர் கட்டணத்தை செலுத்த முடியாது பலர் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.