தற்கொலை வரை கொண்டு சென்ற காய்ச்சல்… ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் காய்ச்சலால் ஏற்பட்ட கொரோனா அசத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் வசித்து வந்தவர் டெல்லி(74). இவருக்கு மனைவி மகேஷ்வரி மற்றும் மகள் நாகேஸ்வரி என்று குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மூவரும் தனித்தனியாக ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாக மூன்று பேருக்கும் காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும், கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என்ற அசத்திலேயே இவ்வாறு தற்கொலை முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

காய்ச்சல் என்றால் உடனே கொரோனா பாதிப்புதான் என்ற அவசியம் இல்லை என்றும் அது சாதாரண காய்ச்சலாக கூட இருக்கலாம் என்றும், எனவே காய்ச்சல் வந்தாலே கொரோனா வந்துவிட்டது என்ற அச்சம் ஏற்பட வேண்டாம் என்றும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.