ஆபாச வழக்கில் சிக்கிய ஆசிரியர் விவகாரம்- வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். விடிய விடிய ராஜகோபாலனிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையிலையே தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன் விசாரணையின் போது மீக சோர்வாகவே காணப்பட்டுள்ளார். அத்துடன் ராஜகோபாலன் தனது செல்போனில் அழித்த ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அந்த ஆதாரங்களை கொண்டு போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் ராஜகோபாலன் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்துள்ளார்.

இதையடுத்து 5 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்த போலீசார் அதற்கு எழுத்துப்பூர்வமாகவே இராஜகோபாலனிடம் பதில் பெற்றுள்ளனர். அத்துடன் அவரது மூன்று நாள்நடவடிக்கைகள் மற்றும் வாக்குமூலங்கள் அனைத்தும் வீடியோவாகவுதம் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பள்ளி நிர்வாகத்திற்கு ராஜகோபாலன் பற்றி புகார் சென்றும் நடவடிக்கையில் இருந்து தப்பவைத்த பள்ளி நிர்வாகி யார்? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்தினீர்கள்?

மாணவிகளுக்கு சினிமா ஆசை காட்டி என்னமாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்? எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்? என்று ஆதாரங்களை காட்டி போலீசார் சரமாரியாக கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுள்ளனர்.

இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று நாட்கள் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் குற்றசம்பவத்தில் இருந்து ராஜகோபாலன் தப்பிக்க முடியாது என்று போலீசார் உறுதியாக தெரிவித்துள்ளனர். மூன்றுநாள் விசாரணை முடிந்துள்ளநிலையில் ராஜகோபாலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் ராஜகோபாலனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அத்துடன் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

ராஜகோபாலனிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில் அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்து சிக்கபோவது யார்? யார்? என்று போக போக தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.