கவிஞர்களிடையே ஒரு மனிதநேயவாதி- கவிஞர் ஒ. என்.வி

கவிஞரும் விமர்சகருமான கே. சச்சிதானந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘ஓ.என்.வி கவிஞர்களிடையே ஒரு மனிதநேயவாதி, மனிதநேயவாதிகள் மத்தியில் ஒரு கவிஞர்’.

ஒ. என்.வியின் இலக்கிய வாழ்க்கை ஏழு தசாப்தங்களாக நீடித்த பாரம்பரிய உள்ளதாகும்.  நவீன, பிராந்திய மற்றும் சர்வதேச சங்கமமாகும் கவிதை வரிகள் அவருடையது. ‘ஓ.என்.வி கவிதைகளில்  ஒரு மேதைத்தனம் , மனிதாபிமான கவலைகள் இரண்டும் அவரது எழுத்துக்களில் பிரதிபலித்தன.

மலையாள மொழிக்கான சிறப்பு அதன் கவிதை நயமாகும். மலையாள மொழியே கவிதை போன்று மென்மையானது.    ஒ என்.வி குருப்பின் கவிதை வரிகளுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள்  வயலார், தேவராஜன் மாஸ்டர், ஜாண்சன் மாஸ்டர், மற்றும் ரவீந்திரன் மாஸ்டர் உட்படும்  திரை உலகம்.

தமிழ் திரைப்பாடல்கள் ஒலிக்காத கேரளா முக்கு மூலை இருக்க போவதில்லை. அந்த அளவு கேரளத்து மக்கள் தமிழ் இசையோடு கலந்து இருந்தனர்.  கல்யாண வீடுகளிலோ,  தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலோ, பேருந்து பயண்ங்களிலோ  தமிழ பாடல்கள் இல்லாது அவர்களால் சிந்தித்து பார்க்க இயலாது. அந்தளவு தமிழ் திரைப்பட பாடலகளை ரசித்தனர்.

 

ம்லையாளத்திரை இசைப்பாடல்கள் அந்த விதம் தமிழர்களில் கலராவிடிலும் மலையாளப்பாடல்களை தீவிரமாக ரசிக்கும்  தமிழர்களும் உண்டு.  ஓ என்.வி குருப்பின் பாடல்களை ரசிக்காது மலையாளத்திரைப்பாடல்களை கடக்கவே இயலாது..

ஓ.ன்.வி கடுமையான அகநிலை கவிதைகளிலிருந்து அண்ட பரிமாணத்தின் கவிதைகளுக்கு சென்றார்;  புராணக்கதைகளில் இருந்து அவர் உஜ்ஜயினி மற்றும் சுயம்வரம் போன்ற படைப்புகளாக  உயர்ந்தார்.  கலைக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான மோதலை உஜ்ஜயினியில் கையாள்கிறார்,  அதே போன்று சுயம்வரம் கவிதையில் iபெண்மையின் அவல நிலையை உணர்த்துகிறார்.

மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் தனது முதல் குரு ,   புகழ்பெற்ற மருத்துவரான  தந்தை எனக்குறிப்பிடுகிறார்.  தனது தந்தையின் அகால மறைவு ‘நற்பகலில் சூரிய அஸ்தமனம்’ போன்று, கவியின் வாழ்க்கையை இருளாக்கியது.   அங்கு கவிதைதான் தான் ஒரே ஆறுதல்.  தனது குழந்தைப் பருவத்தின் இருண்ட தனிமையில் கவிதை என்பது ஒரு ஒளியின் கதிர் ஆக இருந்துள்ளது ஓ. என்.விக்கு.

https://youtu.be/Aoa2t2nxEsk நிறங்கள் தன்……..

கவிதை துக்கமான ஆத்மாக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் ஓ.என்.வி. ஒரு கவிஞரின் வரிகள் பிரபலமடையும்போது வெறும் பாடலாசிரியர் என்று முத்திரை குத்துவதற்கான போக்கு உள்ளதையும் தெரிந்து இருந்தார்.  ‘ஓ.என்.வி கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது,  அவ பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராக நீண்ட கதைகளாகவும்; இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தது.

https://www.youtube.com/watch?v=Zqi4Gb05bj4

கவிதை கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும்; பின்னர் மட்டுமே உயரங்களை வெல்ல முடியும். இல்லையெனில் அது அலைகளில் சுழலும் நீர்நுரைகளாக மறைந்து விடும் என்கிறார் கவி. வேர்கள் எவ்வளவு ஆழத்தை ஆராய்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பரவுவதற்கான வலிமையைச் சேகரிக்கும், இதனால் முழு வானமும் அதன் சொந்தம் என்று பெருமையுடன் சொல்கிறார்..

Idanaazhiyil Oru Kaalocha | Malayalam Film Song

கவிதை ‘உருவத்தில் சிறியதாக ஹைக்கூ போன்றதும் என்றாலும்  அதன் வடிவத்தில் பெரிய மகாபாரதம் போன்றது என்கிறார்.   ஐம்பதுகளில், ஒரு வலுவான உலக அமைதி இயக்கம் இருந்தது,  இது இந்திய கவிஞர்களுக்கும் உத்வேகம் அளித்தது. உண்மையில் இது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக இருந்தது.  அது ‘ஓ.என்.வி கவிதைகளையும் பாதித்தது மட்டுமல்ல ஊக்கப்படுத்தவும் செய்தது.

 

https://www.youtube.com/watch?v=cbEIvk_7-Bg  அருகில் நீ இருந்திருந்தால்

(தன் உயிர் தோழன் தேவ ராஜன் மாஸ்டரை பிரிந்து 12 வருடங்களுக்கு பின் சந்தித்த  நிகழ்வில் எழுதிய ஒரு அருமையான பாடலாகும் இது.   )

இடது அரசியலில் ஈடுபட்டவரான கவிஞர், தனிப்பட்ட கவிதைகள் முதல் பல்வேறு தலைப்புகளில்  ,  சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா கருப்பொருள்களிலும் எழுதினார். கவியின் வாழ்விற்கும் கலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.

அவரது கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது.  பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராகவும், இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றும் நம்பினார்.

O N V Kurupu shares Favorite songs | Manorama News

திரைப்படம் வைசாலி

ஒரு திரைப்பட பாடல் ‘பயன்பாட்டு கவிதை’; மாறிய வடிவத்தை அடைகிறது என்கிறார்..  பல திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 1500 கவிதைகள் உள்ளடங்கிய 21  கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஏழு புத்தகங்களூம் வெளியிட்டுள்ளார். சுமார் 232 படங்களில்  1000 பாடல்களையும் மற்றும் நாடகங்கள் , ஆல்பங்களுக்காகவும் ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார். 1956ல் வெளியான ’காலம் மருன்னானு’என்ற திரைப்படத்திற்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்தது  பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் மாஸ்டர் ஆகும். சிறந்த பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருது பன்னிரண்டு முறை வென்றுள்ளார். தேசிய விருது பத்மஸ்ரீ 1998 இல் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.