யாழில் ஒரு மாதத்துக்கு உட்பட்ட 3 குழந்தைகளுக்கு கொரோனா!

பிறந்து ஒரு மாதத்துக்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 12 நாள் குழந்தைக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த 20 நாள் குழந்தைக்கும், தாய்க்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட 29 நாள் குழந்தைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இளவாலையைச் சேர்ந்த 9 மாதக் குழந்தைக்கும், மானிப்பாயைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கும் அவர்களது பெற்றோருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.