ஐ.தே.க. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மனுக்களை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமது கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதைத் தடுத்து, உத்தரவு பிறப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

விஜித் மலல்கொட, எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர் குழாமே இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியப் பிரமாணங்கள் உயர்நீதிமன்ற விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதனைப் பரிசீலனை செய்த நீதியரசர் குழாம், மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிப்பதற்குத் தீர்மானித்தது.

Leave A Reply

Your email address will not be published.