லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு.

இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனினும், இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகின்றது.

மேலும் இதற்மைய, எதிர்வரும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.