டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த்!

டெல்லியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த காரணத்தினால் டெல்லிக்கு உடனடியாக செல்ல முடியாத சூழலில் பிரதமர் மோடியை நேற்று மாலை நேரில் சந்தித்தார். இதற்காக தனி விமானம் மூலம் டெல்லி சென்ற ஸ்டாலினை, வரவேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாகவே டெல்லி சென்று அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.