யாழில் அனுமதியின்றி டிரக்டரில் மணல் ஏற்றி வந்தவர் கைது!

யாழ்ப்பாணம் : முழுநேரப் பயணத் தடை நேரத்தில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாராஸ் கைதுசெய்யப்பட்டார்.

இன்று காலை கொக்குவில் – குளப்பிட்டி சந்தியருகே அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றி வந்தவரையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தநிலையில், மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அதேவேளை சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.