அபூர் சன்சார் (The World of Apu)

சத்யஜித் ரே எழுதி இயக்கிய, 1959 ல் வெளிவந்த வங்காள மொழி திரைப்படம் ஆகும் அபூர் சன்சார்.  ’தி அப்பு’ முத்தொகுப்பின் மூன்றாம் பகுதி இது. (முத்தொகுப்பின் முதல் இரண்டு பாகங்கள் பதேர் பஞ்சாலி மற்றும் அபராஜிதோ.) பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் அபராஜிதா என்ற பெங்காலி நாவலின் கடைசி பாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

அபு தன் தாயின் மரணத்திற்கு பிறகு தனிமையில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அபுவின் நண்பன் புலு ஒரு உயர் வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இரு  நண்பர்களின் வாழ்க்கையின்  பார்வையும் வெவ்வாறாக இருந்தபோதிலும் அவர்கள் நட்பு தொடர்கிறது.  புலு, அபுவின் கூர்மையான புத்திசாலித்தனத்திலும் நற்குணத்திலும் மதிப்புக் கொண்டவராக இருக்கிறார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

புலு ஒருமுறை தனது உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு அபுவையும் அழைத்துச் செல்கிறார். திருமண நாளில், மணமகனுக்கு மன நோய் இருப்பது தெரிய வருகிறது. தந்தையின் எதிர்ப்பையும் மீறி மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்துகிறார். நடைமுறையில் உள்ள இந்து பாரம்பரிய கிராம வழக்கத்தின் படி, நியமிக்கப்பட்ட  நேரத்தில்  மணமகள் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும்; இல்லையெனில் அவள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருக்க வேண்டியிருக்கும்.  இந்த இக்கட்டான சூழலில் அபுவிடம் மணந்து கொள்ள வேண்டுகின்றனர்.  முதலில் மறுத்தாலும் நண்பன் புலுவின் ஆலோசனையைப் பெற்று மணந்து கொள்ள ஒப்புக் கொள்கிறார் அபு.

 

ஒரு போதும் சந்தித்திராத அபர்ணாவை திருமணம் செய்து கொண்டாலும், அந்த உறவில் ஒரு ஒட்டுதலான உறவு உருவாகுகிறது.     அபர்ணாவுடன் கல்கத்தாவிலுள்ள தனது குடியிருப்பிற்கு  திரும்பும் அபுவிற்கு இடையே ஒரு அன்பான உறவு மலரத் தொடங்குகிறது.

பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவரான அபர்னா கணவனின் அன்பிலும்  காதலிலும் வறுமையான சூழலிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்.  மேம்பட்ட வாழ்க்கையை வழங்க முடியாத நிலையாக இருந்தாலும், உண்மையான தீராத அன்பு அவர்களுக்கு மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இல்லாது கடக்கிறது.  அபர்னா வின் வரவு அபு இழந்த குழந்தைப்பருவத்தின் மீட்டெடுப்பாக இருக்கிறது.

தங்கள் மகன் காஜலைப் பெற்றெடுக்கும் போது, துரதஷ்டவசமாக,   அபர்னா இறந்து விடுகிறார். அபுவின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மறுபடியும் சோகம் தாக்குகிறது.  இந்த நேரத்தில் அபுவால் எளிதாக கடந்து வெளியே வர இயலவில்லை.  சுய பரிதாபம், அலைந்து திரிதல், வெறுப்பு, தனிமை  என துயர்மிகு வாழ்க்கையில் மூழ்கி போகிறார்.

முதல் கதை பதேர் பாஞ்சாலியில் ரயில்களை காண்பது அபுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அபராஜிட்டோவில் ரயில்  அப்புவைக் கவரவில்லை,  அதற்கு பதில் தாயை பிரிந்து நகரத்திற்கு போகும் எரிச்சலை கொடுத்தது.   ஆனால் இறுதிப் படம் அபூர் சன்சாரில் ரயில் பயணம் சிலிர்ப்பை தருவில்லை.  வாழ்க்கையும் கொண்டாடும் படி இல்லை. ஆனால்  ரயிலை பயணங்களுக்கு சார்ந்து இருக்கும் சூழலில் இருக்கிறார்.

இரண்டாவது பாகத்தில் தாய் தனிமையில் இருந்தார்.  அபூர் சன்சாரில் அப்பு தனிமையில் அலைகிறான். தாயின் தனிமை போலல்லாமல், கைவிடப்பட்டதாக உணர்கிறார், தாய்க்கு வாழ்க்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அப்பு உலகத்தையே வெறுக்கிறார்.

அப்புவை புத்திசாலியான மாணவனாக  கண்ட பார்வையாளர்கள்,  அபூர் சன்சாரில் ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து கொண்டு,  பொருத்தமான வேலை இல்லாது  ஒரு நாவலை எழுதிக்கொண்டு இருக்கும் கதாசிரியராக,  கிடைத்த  வாழ்க்கையில் திருப்தியடைந்து, தனது சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்து வருகிறவராக காண்கின்றனர்.

மனைவியின் மரணத்திற்கு குழந்தையே பொறுப்பு என எண்ணி குழந்தையை வெறுக்கும் அபு,  குழந்தயை சந்திப்பதை தவிர்த்து   தகப்பன் என்ற பொறுப்பை மறந்து பயணத்தில் நாட்களை கழிக்கிறார்.

அதே நேரத்தில் தாய் தகப்பனை இழந்த குழந்தை தனது தாய்வழி தாத்தா – பாட்டி வீட்டில் தறுதலையாக வளர்கிறது.  காஜலின் நிலையை கண்டு தாய் வீட்டு குடும்பத்தினரும் வருந்துகின்றனர்.

நண்பனின் வேண்டுதலுக்கு இணங்க, தன்னுடைய மகனை காண வருகிறார் அபு.  தன் சோகச்சுமைகளை களைந்ததாக தான் எழுதி வரும் காகிதக் கட்டை மலைச்சரிவில் எறிந்து விட்டு   வாழ்க்கையின் யதார்த்ததை உணர்ந்து தனது மகனுடன் மீண்டும் ஒன்றிணைய முடிவு செய்கிறார்.

வெகுநாட்களாக தனது தகப்பனார் வருவார் என்று காத்திருந்த காஜல்,  தனது தகப்பனை  முதல் முறையாக பார்த்ததும், அவரை ஒரு தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன் வெறுப்பை உமிழ்கிறான்.

இறுதியில், அவர் அபுவை ஒரு நண்பராக ஏற்றுக்கொண்டு தனது தகப்பனுடன் கல்கத்தாவுக்குத் திரும்புகையில் அபுவிற்கு  புதிதாக ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் அபர்னாவாக ஷர்மிளா தாகூர் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.  அபுவாக நடித்த சௌமித்திரா சாட்டார்ஜியின்(Soumitra Chatterjee) இயல்பான நடிப்பை பற்றி எடுத்து சொல்லப்பட வேண்டியது. அவர் ஒரு சிறந்த கவிஞரும், நாடக நடிகரும்  கூட.

1959 ல் அகில இந்தியாவின் சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதியின் தேசிய திரைப்பட விருது வென்றது.

லண்டன் திரைப்பட விழாவில்  பிரிட்டிஷ் திரைப்பட நிறுவன விருதுகள் பெற்றது.

1960 ல் சிறந்த அசல் மற்றும் கற்பனைத் திரைப்படத்திற்கான சதர்லேண்ட் விருது கிடைக்கப்பெற்றது.

14 வது எடின்பர்க் சர்வதேச திரைப்பட விழாவில் 1960 – சிறந்த வெளிநாட்டு படம் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (யுனைடெட் கிங்டம்) பரிந்துரைக்கப்பட்டவர் –

1962 – சிறந்த படத்திற்கான பாஃப்டா விருது பெற்றது.

32 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான வரிசையில்  தேர்ந்தெடுக்க பட்டாலும் ஆஸ்கார் விருது பெறவில்லை.

1996 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு மூவிலின் இதழின் “100 சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களில்” இப்படவும் சேர்க்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டில், திரைப்பட விமர்சகர் ரோஜர் ஈபர்ட் தனது “100 சிறந்த திரைப்படங்கள்” பட்டியலில் தி அப்பு முத்தொகுப்பை சேர்த்துக் கொண்டார்.

2002 ஆம் ஆண்டில், தி வேர்ல்ட் ஆஃப் அப்பு “தி நியூயார்க் டைம்ஸ் கையேடு டு எவர் மேட் 1,000 திரைப்படங்களுக்குள் இடம்பெற்றது.

2005 ஆம் ஆண்டில், தி அப்பு முத்தொகுப்பு டைம் பத்திரிகையின் ஆல்-டைம் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

’அபு உலகம்’ உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியது. கிரிகோரி நாவாவின் 1995 திரைப்படமான மை ஃபேமிலியின், இறுதி காட்சி அபூர் சன்சாரின் இறுதிக் காட்சியில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்ட், மற்றும் பால் ஆஸ்டரின் 2008 ஆம் ஆண்டு நாவலான மேன் இன் தி டார்க் ஆகிய படங்களில் ’தி வேர்ல்ட் ஆஃப் அபு’ பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அங்கு இரண்டு கதாபாத்திரங்கள் படம் பற்றி விவாதிக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் இந்த படம் சைட் & சவுண்ட் டாப் 250 பிலிம்ஸ் பட்டியலில்  235 இடத்தைப் பிடித்தது.

Leave A Reply

Your email address will not be published.