காதலைப் பிரித்த காதலியின் அண்ணனை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த காதலன் மற்றும் அவரது நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை சூளைமேடு மங்கல் நகரைச் சேர்ந்தவர் சிராஜ் பாஷா(51). இவர் நேற்று மாலை தனியார் நிறுவனத்தில் கலெக்‌ஷன் எக்‌ஸ்க்யூட்டியாக பணிபுரியும் தனது மகனான தஸ்டின் பாஷாவை(22) செங்கல்பட்டை சேர்ந்த வருண் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சூளைமேடு அருகே காரில் கடத்தி சென்றுவிட்டதாகவும் போன் செய்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுவதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடத்தப்பட்ட தஸ்லீம் பாஷாவின் சித்தி மகளான திஸ்லத்பேகம் என்பவர் தனது குடும்பத்துடன் ஈசிஆர் பகுதியில் வசித்து வந்ததுள்ளார். மேலும், திஸ்லத்பேகம் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த வருண்(எ) வடிவேல் ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

வருண் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர் இல்லாததால் பெண்ணின் குடும்பத்தார்கள் மற்றும் பெண்ணின் அண்ணனும் தற்போது கடத்தப்பட்டவருமான தஸ்டிம் பாஷா ஆகியோர் பெண்ணின் காதலரான வருணை முஸ்லிம் சமூகத்திற்கு மாற கூறியுள்ளனர்.
ஆனால், முஸ்லிம் மதத்திற்கு மாற முடியாது எனக் கூறியுள்ளார் வருண்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார்கள் சில தினங்களுக்கு முன் திஸ்லத் பேகத்திற்கு அவரது வீட்டிற்கு கீழேயே குடியிருந்து சென்னையில் பணியாற்றி வரும் வேலூரை சேர்ந்த தெளஹித் என்பவருக்கு அவசர அவசரமாக நிச்சயம் செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த வருண் பெண் ஒருவர் உதவியுடன் செல்போன் மூலம் தொடர்புகொண்டு சூளைமேடு அருகே தஸ்டின் பாஷாவை வரவழைத்து வருண் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஃபார்ச்சூனர் காரில் கடத்தியுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே தஸ்டின் பாஷா தனது தங்கை ஆயிஷா பேகத்திற்கு போன் செய்து, வருண் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், சித்திமகளான திஸ்லத் பேகத்தை அழைத்து வரவில்லை எனில் தன்னை இவர்கள் கொன்று விடுவார்கள் எனக்கூறி போனை துண்டித்துள்ளார்.

தஸ்டின் பாஷாவின் செல்போன் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது கல்பாக்கம் அடுத்த கொய்யாத்தோப்பு பகுதியில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து சூளைமேடு போலீசார் கல்பாக்கம் கொய்யாத்தோப்பு பகுதிக்கு சென்று வருண் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைப்பதை அறிந்த வருண் மற்றும் அவரது நண்பர்களான தமிழ், வினோத் ஆகியோர் தப்பி சென்றனர்.
இதையடுத்துகடத்தி சிறை வைக்கப்பட்டிருந்த தஸ்லின் பாஷாவை மீட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வருண் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்ட விரோதமாக தடுத்தல், கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தி செல்லுதல், சட்ட விரோதமாக சிறை வைத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.