போதைக்காக சிறுவன் செய்த செயல்.. முக்கிய உடல்பாகத்தை வெட்டி எடுத்த மருத்துவர்கள்! கலங்கும் தாய்

இந்தியாவில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சிறுவனின் முன்கையை மருத்துவர்கள் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனின் தயார் பொலிசில் அளித்த புகாரில், பள்ளி படிப்பை 10ம் வகுப்பில் பாதியிலே கைவிட்ட மகன், கடந்த மே 31ம் திகதி கைப்பந்து பயிற்சியாளர் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொள்ள Chamarajpet பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றான்.

இரவு 9 மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றவன் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினான்.

சுமார் நான்கு நாட்களுக்குப் பிறகு, மகனின் வலது முழங்கை வீங்கியது.

நாங்கள் அவனை நகரத்தில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவனின் உடலுக்குள் இருக்கும் நச்சுப் பொருளை அகற்றுவதற்காக கையை வெட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மே 31ம் திகதி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கைப்பந்து பயிற்சியாளர், சில மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசியில் ஏற்றி மகனின் கையில் செலுத்தியதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுவன் முன்கையை மருத்துவர்கள் வெட்டிய எடுத்த நிலையில், அவன் உடலில் இருந்த விஷப் பொருள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் மருத்துவர்களைக் கோரியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.