எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டங்கள்!

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறை, கடுகண்ணாவை ஆகிய பிரதேசங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன்போது மாகதுர பிரதேசத்திலிருந்து மாத்தறை நகர் வரை வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, கடுகண்ணாவைப் பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிப்பட்டதைத் தொடர்ந்து கடந் தவாரம் முதல் பல்வேறு பிரதேசங்களில், எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.