இராஜாங்கனை தொடர்ந்து முடக்கம் – 12 ஆயிரம் பேர் வெளியேற முடியாது!!

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனைப் பிரதேசம் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராஜாங்கனைப் பிரதேசத்தில் மூன்று பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். எவரும் வெளியே செல்ல முடியாது. வெளியிலிருந்து எவரும் உள்ளே வரமுடியாது.

ஏனைய பிரதேசங்களிலும் எவராவது கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டால் இதே நடைமுறை தொடரும். இவ்வாறு செய்தால்தான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க முடியும்” – என்றார்.

Comments are closed.