சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரில் சமுர்த்தி பயனாளியிடம் வீடு கையளிப்பு!

மட்டக்களப்பு: சமுர்த்தி திணைக்களம் நாடுபூராவும் யூலை 01ம் திகதி முதல் யூலை 07ம் திகதி வரை சௌபாக்கியா வாரத்தை செயற்படத்துமாறும் இதன் போது சமுர்த்தி திட்டத்தால் மேற் கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வுகளையும், புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்வுகளையும் மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதற்கினங்க 01.07.2021 அன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் சௌபாக்கியா வீடு ஒன்று சமுர்த்தி பயனாளியிடம் பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் அவர்களால் கையளித்து வைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டத்தின் முக்கிய செயற்பாட்டில் ஒன்று தான் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது. இதன் அடிப்படையில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தை சமுர்த்தி திணைக்களம் 2020ல் அறிமுகம் செய்து வைத்திருந்தது. இவ்வீட்டுத்திட்டத்திற்கு சமுர்த்தி திணைக்களம் ஆறு லட்சம் ரூபாவை வழங்கும் போது மிகுதி நான்கு லட்சம் ரூபாவை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலமே இவ்வீட்டை நிர்மானித்துக் கொள்ள முடியும்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொள்ள பல கிராமத்தில் இருந்தும் பல குடும்பங்கள் ஆர்வம் காட்டிய போதும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராக்கேணி கிராமத்தில் ஹயாத்து முகமது ஹபீபா உம்மாவின் குடும்பத்தை தெரிவு செய்து அவருக்கு கல் வீட்டினை அமைத்தக் கொடுக்க ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு ஆர்வம் காட்டியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M..அலி அக்பர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கி.கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்.S.A.M.பஸீர் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் M.I.M.இசாட் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனிபா அவர்களும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.M.அஸீஸ் அவர்களும், கிராம உத்தியோகத்தர் அமீன் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சகலரும் சுகாதார முறையை கடைபிடித்து இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.