“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” நிறுவனம் கோவிட் சிகிச்சை மருத்துவ கருவிகளை அரசாங்கத்திற்கு அன்பளித்தது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான –

3 கோடி ரூபாய்கள் மதிப்பிலான மருத்துவ உபகரணத் தொகுதி,

“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் நேற்று அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்த அன்பளிப்பை நல்கிய “முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” நிறுவனத்தினருக்கும், அவர்களது அமெரிக்க மற்றும் பிரித்தானிய பங்காளிகளுக்கும் இலங்கை மக்கள் சார்பாக எனது நன்றிகள்.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய 3 சுவாசக் கருவிகள் (Ventilators),

4 பிராண வாயு கருவிகள் (Oxygen Therapy),

3000 பீ.பீ.ஈ (PPE). தொகுதிகள் உட்பட்ட மருத்துவ உபரகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய அமெரிக்காவின் அமெரிகெயார்ஸ் (Americares-USA) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம் (Muslim Aid Head Quarters – UK) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

1985ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் தலைமையகம், இதுவரை சுமார் 20 இற்கும் அதிகமான உலக நாடுகளுடன் இணைந்து – நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா அமைப்பு, சுனாமி பேரழிவை தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது.

மேற்படி நிகழ்வில் – கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி, கௌரவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஃபைசர் கான் உள்ளிட்ட முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.