பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஜூலை 8ம் தேதி இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அதே வீரர்களே பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

துவக்க வீரர்களாக வழக்கம் போல் ஜேசன் ராய் மற்றும் ஜானி பாரிஸ்டோ ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். அதே போல் மூன்றாவது இடத்தில் ஜோ ரூட்டும், நான்காவது இடத்தில் இயன் மோர்கனும் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக சாம் பில்லிங்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மொய்ன் அலி, சாம் கர்ரான்,லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர டாம் கர்ரான், லியன் டாவ்சன் மற்றும் அடில் ரசீத் போன்ற வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் டேவிட் வில்லே, மார்க் வுட், கிரிஸ் வோக்ஸ் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணி அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி;

இயன் மோர்கன், ஜோ ரூட், ஜேசன் ராய், ஜானி பாரிஸ்டோ, டாம் பாண்டன், சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரான், டாம் கர்ரான், லியம் டாவ்சன், மொய்ன் அலி, ஜார்ஜ் கார்டன், லியம் லிவிங்ஸ்டோன், அடில் ரசீத், டேவிட் வில்லே, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Leave A Reply

Your email address will not be published.