இந்தியாவில் உருவாகிறது உலகின் 3வது பெரிய ஸ்டேடியம்.

இந்தியாவில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது உலகிலேயே 3வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகவுள்ளது. முதலிடத்தில் இந்தியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட நரேந்திர மோடி மைதானம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானமும் உள்ளது.

ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள சாம்ப் என்ற கிராமத்தில் இந்த மைதானத்திற்காக 100 ஏக்கர் நிலத்தை ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் குத்தகைக்கு எடுத்துள்ளது. ரூ.350 கோடி செலவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் 75,000 பார்வையாளர்கள் வரை அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்தை கட்டுவதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கிகளிடம் ரூ.100 கோடி கடனுதவி கேட்டு வருகிறது.

இந்நிலையில் மைதானத்தின் கட்டுமானப்பணிகளுக்காக பிசிசிஐ ரூ.100 கோடியை நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் மைதானத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.