மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா தொற்று; பொலிஸார் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தலில்….

யாழ்., அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 38 குடும்பங்களைச் சுகாதரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பதிவுத் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அந்நிலையில், மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் ,மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களில் 56 நபர்கள் சுகாதாரப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.