மட்டக்களப்பு மாவட்டத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேரும்,
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர் உட்பட மொத்தமாக 111 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.