யாழில் கொரோனாவால் இதுவரை 107 பேர் மரணம் 6,015 பேர் தொற்றாளர்களாக அடையாளம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 603 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.