சசிகலா மீண்டும் அரசியலில் நுழைய போடும் முதல் பிள்ளையார் சுழி! வெளியான முக்கிய தகவல்

சசிகலா மீண்டும் அரசியலில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் முதல் வேளையாக அவர் செய்யப்போவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த போது, சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தற்போதைக்கு நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறினார்.

அதன் பின் தேர்தலில் அதிமுக தோல்வியடைய, திமுக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து சமீப நாட்களாக சசிகலா நான் மீண்டும் அரசியலுக்கு வரவிருப்பது குறித்து, தொண்டர்களிடம் பேசிய வரும் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இது அதிமுக-வினரிடையே கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சசிகலா இதுவரை அதிகாரப்பூர்வமாக மீண்டும் அரசியலில் நுழைவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால், சசிகலா ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாராம். அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், முதலில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, அதன் பின் இந்த சுற்றுப்பயணத்தை துவங்கவுள்ளதாக, அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.