அரசின் அராஜகத்தை அனுமதிக்க முடியாது! மலையக ஆசிரியர் முன்னணி கண்டனம்.

ஆசிரியர் சங்கங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைர்களை மிலேச்சதனமாகவும் அராஜக முறையிலும் அரசு தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மலையக ஆசிரியர் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவசக் கல்வி பறிபோகும் வகையில் அரசு சட்டங்களை இயற்றி எதிர்கால சந்ததியினரின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்றது.

எனவே, அதனைத் தடுக்கும் முயற்சியில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடும் வகையில், ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தல் போர்வையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.