இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு.

இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல பிரச்சனைகளால் அணியை கூட தேர்வு செய்ய முடியாமல் தவித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று இந்திய தொடருக்கான இலங்கை அணியை அறிவித்துள்ளது.

இந்திய தொடருக்கான இலங்கை அணியில் குஷல் பெரேரா போன்ற சீனியர் வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் இந்திய தொடருக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக தனன்ஞனயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தொடருக்கான இலங்கை அணியில் அவிக்‌‌ஷா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, பதும் நிஷான்கா, வனிந்து ஹசரங்க போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இசுரு உடானா, அகிலா தனன்ஞனயா, லஹிரு உடானா போன்ற பெயர் தெரிந்த சில வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய தொடருக்கான இலங்கை அணி;
தசுன் ஷனாகா (கேப்டன்), தனன்ஞனயா டி சில்வா (துணை கேப்டன்), அவிக்‌ஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, பதும் நிஷான்கா, சாரித் அஷாலன்கா, வானிந்து ஹசரன்கா, அசேன் பானண்ட்ரா, மினோட் பனுகா, லஹிரு உடானா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருனாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, லக்‌ஷன் சண்டகன், அகிலா தனன்ஞனயா, சிம்ரன் பெர்னாண்டோ, தனன்ஞனயா லக்‌ஷன், இசான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமே, அசிதா பெர்னாண்டோ, காசுன் ரஜிதா, லகிரு உடானா, இசுரு உடானா.

Leave A Reply

Your email address will not be published.